உலக பூனைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், பின்னவல மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப் பொருத்தமான பெயர்களைச் சூட்டுவதற்காகப் பெயரிடும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குப் பிரியர்கள் தங்களின் ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெயர்களைப் பரிந்துரைப்பவர்களுக்கு, உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கவிரும்பும் பொதுமக்கள் பின்வல மிருகக்காட்சிசாலையால் பகிரப்பட்ட கூகுள் படிவம் ஊடாகத் தங்களது பெயர் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.
இந்தப் போட்டிக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment