நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது.
பேரிடரால் சேதமடைந்த கட்டடங்கள், பாறைகள் மற்றும் பிற இடிபாடுகள் உட்பட 2.2 மில்லியன் டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 583 வெளிநாட்டினர் உட்பட 4,858 ஆக உயர்ந்துள்ளது.
பேரிடரிலிருந்து கிட்டத்தட்ட 11,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திரன் ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன், 42 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment