Sunday, September 6, 2026

தெல்தெனியவில் சட்டவிரோத விருந்து - போதைப்பொருட்களுடன் 41 பேர் கைது!

 

தெல்தெனிய பகுதியில் முகநூல் (Facebook) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட விருந்தொன்றில் 41 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெல்தெனிய காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கையின் போது பல்வேறு போதைப்பொருட்களும் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 947 மில்லிகிராம் கஞ்சா, 3.657 கிராம் ஹஷீஷ், 1.276 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோதச் சிகரெட்டுகள், 500 மில்லிலீற்றர் அளவு கொண்ட 35 பியர்கள் மற்றும் 750 மில்லிலீற்றர் அளவு கொண்ட 13 மதுபானப் போத்தல்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஆண்களில் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு 22 முதல் 43 வயதுக்குட்பட்ட 5 பெண்களும் இதில் அடங்குவர் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment