நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிட்னியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி சைலஜா (42) மற்றும் மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
கைலாஷ் மலை யாத்திரை சென்ற இவர்களுடனான தொடர்பு புதன்கிழமை காலை உணவுக்குப் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து குறைந்தது 39 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவசர மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அந்தக் குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என தமிழ் சமூகம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment