கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/ காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் 25 வது வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா நிகழ்வுகளில் புதிய நூலகம் திறந்து வைப்பு, சிறப்பு மலர் வெளியீடு, கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 2026/02/02ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு விமர்சையாக நடைபெற்றது.
வித்தியாலய பழைய மாணவர்கள், பிரதேச தனவந்தர்களின் முழு பங்களிப்புடனும், பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்படனும் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.றிஹாஸ் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் (SLEAS) சிறப்பித்ததுடன், கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்ஷுக் (SLEAS), கோறளைப்பற்று பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் (SLEAS) , மற்றும் விஷேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ம.ம.கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் (ஏ.எல்.எம்.சப்றாஸ்), பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வித்தியாலயத்தின் முதன் முதலாக புதிய கோலாட்ட குழுவினர் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், வித்தியாலயத்தின் கடந்த 25 ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டியில் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவர்கள், பிரதம அதிதி, வித்தியாலய அதிபர், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.




0 comments:
Post a Comment