இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது வயது மற்றும் இரண்டரை வயதுடைய இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி, இந்த ஆண்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 32,071 ஆக உள்ளது. இதற்கிடையில், நிலவி வரும் மழைக்கால வானிலையைக் கருத்திற் கொண்டு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதன்படி, டெங்கு பரவும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், கல்முனை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிலும் செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment