நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதேவேளை ஏனைய கடல் பகுதிகளில் இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
0 comments:
Post a Comment