தரமற்ற, போலியான மற்றும் பதிவு செய்யப்படாத சுகாதார தயாரிப்புகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 'தேசிய செயற்திட்டம்' ஒன்றைத் தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கையில் ஒரு வார கால விசேட பணியை ஆரம்பித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையின் தகவல்படி, இந்த திட்டம் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனான உயர்மட்ட சந்திப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த சந்திப்பின் போது சந்தைக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை வலுப்படுத்துதல், பாதுகாப்பற்ற மருத்துவப் பொருட்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றுக்கான முன்னுரிமை வேலைத்திட்டங்களை அடையாளம் காணுதல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த வரைவு தேசிய செயற்திட்டத்தின் முக்கிய கூறுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) குழுக்களுடன் தொழில்நுட்ப ஆலோசனைகளும் நடத்தப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment