Tuesday, May 26, 2026

காத்தான்குடி பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்

 

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இன்று இரவு 7:20 க்கு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து காரணமாக வர்த்தக நிலையத்திலிருந்த பெருமளவிலான மின்சார உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.






0 comments:

Post a Comment