நடைபெறவுள்ள வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தத்தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் விசேட சமூக மருத்துவ நிபுணர் திலங்க ருவன்பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தானசாலை நடத்தப்படும் இடம், ஏற்பாட்டாளர்களின் பெயர்கள், முக்கிய ஒருங்கிணைப்பாளர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள் உள்ளிட்ட அத்தியாவசிய விபரங்களை ஏற்பாட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தானசாலைகளை பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் நடத்துவதற்கான அடிப்படைக் வழிகாட்டல்களை வழங்குவார்கள் என்றும், இந்த வழிகாட்டல்களைத் தேடிப் பின்பற்றுவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
"தற்போது நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இம்முறை தானசாலைகளில் வழமையை விடவும் அதிகளவில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும்" என மருத்துவர் திலங்க ருவன்பத்திரன சுட்டிக்காட்டினார்.
தானசாலைகளுக்கு உத்தியோகபூர்வத் தடை எதுவும் விதிக்கப்படாத போதிலும், இந்த ஆண்டு குளிர் பானங்கள் விநியோகிப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதற்குப் பதிலாக தேநீர், கோப்பி போன்ற மூலிகை பானங்களை வழங்குமாறு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொதிக்க வைத்து ஆறவைக்கப்பட்ட நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கொதிக்க வைத்து ஆறவைக்கப்பட்ட நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment