Wednesday, June 3, 2026

ஹொரணயில் உள்ள அரச வங்கியில் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பை திருட்டு

 

ஹொரண பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில், 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பை ஒன்று திருடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment