Sunday, June 14, 2026

ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்

 

உலகின் முன்னணி தொழிற்துறை நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சிமாநாடு நாளை (15) பிரான்சில் ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில், பிரான்சுக்குச் சொந்தமான ஜெனீவா ஏரிக்கு (Lake Geneva) அருகில் அமைந்துள்ள விடுதி வளாகமொன்றில் இந்தமாநாடு நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் இந்த உச்சிமாநாடு நாளை மறுதினம் (16) வரை தொடரவுள்ளதாக அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தமுறை நடைபெறவுள்ள ஜி-7 அரச தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகள், வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டின் போது உலகத் தலைவர்களால் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment