Tuesday, June 16, 2026

முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

 

இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிறைக் குழுத் தலைவர் மௌலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments:

Post a Comment