Wednesday, June 10, 2026

குடிநீர் போத்தல்களுக்கான விலை அதிகரிப்பு

 

உள்நாட்டில் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீருக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கான புதிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த விலைத் திருத்தம் இன்று (10) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, குடிநீர் போத்தல்களுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் வருமாறு:

அதன்படி, 500 - 999 மில்லிலீற்றர் போத்தல் ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

1 லீற்றர் - 1.49 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

1.5 லீற்றர் - 1.99 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2 லீற்றர் - 2.49 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

5 லீற்றர் - 6.99 லீற்றர் போத்தல் ரூபா 50 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

குறித்த கட்டுப்பாட்டு விலைகளை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

0 comments:

Post a Comment