Monday, June 1, 2026

சர்வதேச சந்தையில் தங்க விலை வீழ்ச்சி – வெள்ளி விலை அதிகரிப்பு

 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் இன்று (01) திருத்தங்கள் பதிவாகியுள்ளன.

சர்வதேச சந்தை நகர்வுகளுக்கு அமைய, இன்று தங்கம் ஒரு அவுண்ஸின் விலை 4,477.51 டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பின்னணியில், இந்த சர்வதேச விலை வீழ்ச்சியின் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது.

தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ள போதிலும், வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை இன்றையதினம் 74.95 டொலராக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் ஆகியவையே உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்களுக்கு முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment