இலங்கையில் முதன்முறையாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட 'மினி உசி' (Mini Uzi) ரக தானியங்கி துப்பாக்கி ஒன்றை கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சமீபத்தில் நாடுகடத்தப்பட்டு, தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "மகாவத்தை சாமர" என்பவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மயான வளாகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, ஒரு தோட்டாப் பெட்டி மற்றும் 03 தோட்டாக்கள் என்பன அடங்கியிருந்தன.
கைப்பற்றப்பட்ட மினி உசி ரக துப்பாக்கியானது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment