மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவிற்கு சுமார் 196 கோடி டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இந்தநிலையில், சவூதி அரேபியா கோரியுள்ள ஆயுதங்களில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட துல்லியமான தாக்குதல் ஆயுத அமைப்புகளும் அடங்கும்.
அவை குறைந்த சேதத்துடன் இலக்குகளைத் துல்லியமாக அழிக்கக்கூடியவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment