அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டதுடன், அவர் மேடையில் செய்த செயல் இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வீரர்களுக்குப் பதக்கங்களையும் உலகக் கிண்ணத்தையும் வழங்கி கௌரவித்தார்.
கிண்ணத்தை ஸ்பெயின் அணியிடம் வழங்கிய பின்னர், ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரி கிண்ணத்தை உயர்த்தத் தயாரான நிலையிலும் டொனால்ட் ட்ரம்ப் அங்கிருந்து நகராமல் மேடையிலேயே தொடர்ந்து நின்றார்.
இந்தநிலையில் ஸ்பெயினின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கிண்ண வெற்றிக் கொண்டாட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் 'போட்டோபாம்' (Photobomb) செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையாகவும் வியப்பாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment