Monday, July 20, 2026

கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

 

கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment