Monday, July 20, 2026

அமெரிக்க - ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஆசிய சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

 

Uploading: 172146 of 172146 bytes uploaded.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை ஊடான எரிபொருள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிய சந்தையில் வர்த்தக நடவடிக்கையின்ஆரம்பத்தில் இன்று (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக 9 ஆவது இரவாக ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.75 அமெரிக்க டொலர் அதிகரித்து 90.85 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.56 அமெரிக்க டொலர் அதிகரித்து 85.05 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது..

0 comments:

Post a Comment