மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடலம், இறுதி ஊர்வலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கியோம் (Qom) நகரை வந்தடைந்துள்ளதாக அந்தநாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
கியோம் மாகாணத்தில் உள்ள ஜம்கரன் (Jamkaran) மசூதிக்கு மேலாக, கமேனியின் உடலைத் தாங்கிய உலங்கு வானூர்தி பறந்து செல்லும் காட்சிகளை ஈரானின் அரச தொலைக்காட்சியான IRIB பகிர்ந்துள்ளது.
நாளை கியோம் நகரில் இந்த இறுதி ஊர்வல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஈராக்கின் நஜாஃப் (Najaf) மற்றும் கர்பலா (Karbala) ஆகிய நகரங்களிலும் கமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment