Wednesday, July 1, 2026

வருமான வரி அறிக்கை சமர்ப்பிப்பு இன்று முதல் ஆரம்பம்

 

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பணிகள் இன்றைய தினம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வருமான வரிக்காக பதிவு செய்துகொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் தங்களது வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரி செலுத்துவோர் தங்களது வரி அடையாள இலக்கத்தை பயன்படுத்தி, இணையவழி ஊடாக இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வருடாந்த வருமானம் 1.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து தனிநபர்களும் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment