Wednesday, July 1, 2026

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

 

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் நிலவும் இழுபறி மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்புவதில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 0.45% அதிகரித்து, ஒரு பீப்பாய் 73.28 டொலராக விற்பனையாகிறது.

அதேபோல், WTI ரக மசகு எண்ணெய் விலை 0.49% உயர்ந்து, ஒரு பீப்பாய் 69.84 டொலராக பதிவாகியுள்ளது.

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு மத்தியில், ஆசியப் பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.

ஜப்பானின் 'நிக்கேய்' (Nikkei 225) பங்குச்சந்தை 0.6% வளர்ச்சியைக் காட்டிய போதிலும், அவுஸ்திரேலியாவின் S&P/ASX 200 சந்தை 0.4 வீதத்தாலும், தென்கொரியாவின் 'கோஸ்பி' (Kospi) சந்தை 1.8 வீதத்தாலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

அதேவேளை, சீனாவின் ஷாங்காய் சந்தை 0.1% சிறிய உயர்வைக் காட்டியுள்ளதுடன், ஹொங்கொங் பங்குச்சந்தை இன்று மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment