அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலைகளின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாய்க்கும், சம்பா நெல்லை 130 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல்லை 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து இந்த உத்தரவாத விலைகளில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் தயாராக இருப்பதாகவும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தால் சந்தையில் அரிசி விலையைக் குறைக்க அவர்கள் உடன்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment